Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

‘ஜோரா கைய தட்டுங்க’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜோரா கைய தட்டுங்க
தனது அப்பாவிடம் இருந்து முற்றிலும் கற்றுக்கொள்ளாமல் அரைமட்டமாக மேஜிக் கற்ற யோகி பாபு, ஊருக்கு ஊர் சென்று மேஜிக் ஷோக்களை நடத்தி வருகிறார். அப்படியே ஒரு மேஜிக் நிகழ்ச்சி நடத்திய போது எதிர்பாராதவிதமாக ஒரு சிறுவனுக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களிடமிருந்தும் போலீசாரிடமிருந்தும் அவர் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகிறார்.

அவரது வீட்டின் அருகே வசிக்கும் அருவி பாலாவும், அவரது நண்பர்களும் எப்போதும் யோகி பாபுவை வம்பில் இழுத்துக்கொண்டு அவரை சிரிக்க வைக்க நினைக்கும் குழுவாக இருக்கின்றனர். இப்படியான சூழ்நிலையில், யோகி பாபுவின் மேஜிக் நிகழ்ச்சிகளை ரசிக்கும் சாந்தி ராவ், அவரிடம் அன்பாக நடந்து கொள்கிறாள். இது பின்னர் காதலாக வளர்கிறது.

இதற்கிடையே யோகி பாபுவுக்கு தொடர்ச்சியாக பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அந்த பிரச்சனைகளை அவர் எப்படி சமாளித்தார்? அவர் கற்றிருந்த மேஜிக்குதான் அந்த நேரங்களில் உதவிகரமாக இருந்ததா? இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக யோகி பாபுவின் நடிப்பும், அவரது காமெடி நேர்த்தியும் உள்ளன. அதனோடு, கேரளாவின் அழகிய பின்னணியில் படமாக்கப்பட்ட காட்சிகள் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன. ஆனால், இவ்வளவு திறமையான நடிகருடன் இரண்டு மணி நேரம் முழுவதும் மகிழ்ச்சியூட்டும் நகைச்சுவைத் திரைப்படமாக உருவாக்கியிருக்கலாம். அல்லது மேஜிக் கலைஞராக யோகி பாபுவின் திறமைகளை முழுமையாக பதிவு செய்து, திரையில் மாயாஜாலம் உருவாக்கியிருக்கலாம். எனவே, மொத்தத்தில் இந்தப் படம் ஒரளவிற்கு மெதுவாகவே ‘கைய தட்ட’ வைக்கிறது.

- Advertisement -

Read more

Local News