Touring Talkies
100% Cinema

Saturday, June 7, 2025

Touring Talkies

‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் டீஸர் வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2024 ஏப்ரல் மாதம் ‘ஒரு நொடி’ என்ற திரைப்படம் வெளியானது. இதில் தமன்குமார் கதாநாயகனாக நடித்தார். இவருடன் இணைந்து வேல ராமமூர்த்தி, எம்.எஸ். பாஸ்கர், தீபா சங்கர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் கிரைம் திரில்லர் வகையில் மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்களையும் பெற்றது.

இந்த நிலையில், இயக்குநர் மணிவர்மன் மற்றும் நடிகர் தமன்குமார் ஆகியோர் மீண்டும் இணைந்து புதிய திரைப்படத்தை உருவாக்கி வருகின்றனர். அந்த படத்திற்கு ‘ஜென்ம நட்சத்திரம்’ என்ற தலைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் தமன்குமாருக்கு ஜோடியாக மால்வி மல்கோத்ரா நடித்துள்ளார். அவர்களுடன் இணைந்து காளி வெங்கட், முனீஷ்காந்த், தலைவாசல் விஜய், வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை அமோகம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஹாரர் தழுவிய கதையமைப்பில் உருவாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியிடப்பட்டது. அது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகியது. தற்போது ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News