Thursday, October 17, 2024

கங்குவா ப்ரோமோஷனில் பிசியாகும் சூர்யா… மும்பையில் சூழ்ந்த ரசிகர்கள் வெள்ளம்! #Kanguva

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் மிகப்பெரிய படமாக உருவாகி வருகிறது. இதில் பாபி தியோல், திஷா பதாணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், மேலும் நடிகர் கார்த்தி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

‘கங்குவா’ விரைவில் வெளியாவதால், படக்குழு புரமோஷன் பணிகளை துவங்கிவிட்டது. சூர்யா, இயக்குனர் சிவா மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் புரமோஷன் நிகழ்வுகளில் பிசியாகியுள்ளனர். ‘கங்குவா’ 2,000 கோடி வசூல் செய்யும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.

வட இந்தியாவில் ‘கங்குவா’ படத்தின் புரமோஷன் வேலைகளில் சூர்யா ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார், அப்போது அங்கு கூடிய ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு பிறகு, 2 வருடங்கள் கழித்து ‘கங்குவா’ வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News