Touring Talkies
100% Cinema

Friday, August 15, 2025

Touring Talkies

தன்னை வாழ்த்திய அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், எனது 50 ஆண்டு கால திரையுலகப் பயணத்தை ஒட்டி என்னை மனமார வாழ்த்திய என் நண்பரும் தமிழக முதல்வருமான மாண்புமிகு திரு. மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நண்பர் அண்ணாமலை, சசிகலா அம்மையார், தினகரன், பிரேமலதா அம்மையார் மற்றும் பல அரசியல் நண்பர்களுக்கும் கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்களுக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என‌ கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News