சுந்தர்.சி மற்றும் வடிவேலு இணைந்துள்ள திரைப்படம் ‘கேங்கர்ஸ்’. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த பிரபல கூட்டணி இணைந்துள்ளது என்பதால், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிக அதிகமாக இருந்தது. இந்தப் படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது.
கேத்ரின் தெரசா, வாணி போஜன், ஹரிஷ் பெரடி, மைம் கோபி, முனிஸ்காந்த், பக்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தமிழகத்தின் 316 திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், ‘கேங்கர்ஸ்’ திரைப்படம் தனது முதல் நாளில் ரூ.1 கோடி 16 லட்சத்து 81 ஆயிரத்து 800 வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.