Touring Talkies
100% Cinema

Tuesday, July 15, 2025

Touring Talkies

பாலிவுட் படங்களில் நடிக்க ஆசைப்படும் ஸ்குவிட் கேம் வெப் சீரிஸ் கதாநாயகன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

உலகளவில் புகழ் பெற்ற  ஸ்குவிட் கேம் தொடரில், பிளேயர் 456 சியோங் கி-ஹுன் என்ற காதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் லீ ஜங்-ஜே. இந்த கதாபாத்திரத்திற்காக மிகவும் பிரபலமான இவர், இந்திய படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்திருக்கிறார். சமீபத்திய ஒரு நேர்காணலில், லீ ஜங்-ஜே, “வாய்ப்பு கிடைத்தால் பாலிவுட் படத்தில் நடிக்க விரும்புகிறேன்” என்று பகிர்ந்து கொண்டார்.கடந்த 2021-ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் ‘ஸ்குவிட் கேம்’. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் – ஹியூக் இயக்கி இருந்தார்.முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து இதன் 2-வது சீசன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இதனையடுத்து இந்தத் தொடரின் அடுத்த சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தநிலையில்,  3-வது சீசன் கடந்த மாதம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

- Advertisement -

Read more

Local News