Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

சிவகார்த்திகேயனை இயக்குகிறாரா பார்க்கிங் பட இயக்குனர்? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் வைத்துள்ளாரா எஸ்.கே?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்தாண்டு இறுதியில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்எஸ் பாஸ்கர் நடிப்பில் வெளியான ‘பார்க்கிங்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். பார்க்கிங் பிரச்சினையை மையமாகக் கொண்டு இந்தப்படம் உருவாகியிருந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ராம்குமார் மீண்டும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

தற்போது, ராம்குமார் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதை கூறியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை ‘மாவீரன்’ படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படம் தீபாவளிக்கு வெளியாவதுடன், அவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதன்பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படங்களை முடித்ததும், ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

Read more

Local News