Saturday, September 28, 2024

முதல்முறையாக இப்படி ஒரு கிளைமாக்ஸ் காட்சியில் நடிக்கும் சிவகார்த்திகேயன்… ரசிகர்கள் ஏற்பார்களா? #AMARAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில், கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் ‘அமரன்’. முதல்முறையாக ராணுவ வீரராக நடிக்க வேண்டியதால், சிவகார்த்திகேயன் தீவிரமாக உடற்பயிற்சி செய்து, தனது உடல் மொழியும் வசன உச்சரிப்பும் முழுமையாக மாறியிருக்கிறார். அவரின் இந்த கடுமையான உழைப்பை ‘அமரன்’ படத்தின் டீசரை பார்த்தவுடன் நமக்கே தெரிகிறது.

அதனால், இப்படம் நிச்சயம் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் ஒரு மிக முக்கியமான படமாக இருக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளது. மேலும், ‘அமரன்’ திரைப்படம் மறைந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் என்பதால், இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், சிவகார்த்திகேயன் நடித்த கதாபாத்திரம் மறைவது போலவே காட்டப்படும்.

சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த எந்த திரைப்படத்திலும் அவரின் கதாபாத்திரம் இறப்பது போல காட்சியளிக்கப்படவில்லை. இதனை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தாலும், படத்திற்கு இதுதான் சரியான முடிவாக இருக்கும். எனவே ‘அமரன்’ படத்தின் கிளைமாக்ஸ் நிச்சயமாக துயரமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News