பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். சோனாக்ஷி கடந்த ஏழு ஆண்டுகளாக ஜாகீர் இக்பாலை காதலித்து வந்தார். இருவரும் 2024ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

சமீபத்தில் சோனாக்ஷி சின்ஹா தனது கணவருடன் இணைந்து எடுத்த வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவின் கீழ் ஒரு ரசிகர், “உங்கள் விவாகரத்து தேதி நெருங்கி விட்டது” என்று கமெண்ட் செய்துள்ளார்.
இந்தக் கருத்தை பார்த்த சோனாக்ஷி மிகுந்த கோபத்துடன், “முதலில் உன்னுடைய குடும்பத்தையே விவாகரத்து செய்வார்கள். அதன் பிறகு தான் நாங்கள். இது சத்தியம்” என அந்த ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறிய பதில் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.