நடிகர் ஜெயம் ரவி தனது நடிப்பு வாழ்க்கையை காதல் கதாநாயகனாகவும் காமெடி களங்களிலும் துவங்கி, பின்னர் தன்னை ஆக்ஷன் ஹீரோவாகவும் மாற்றிக் கொண்டார். அவரின் இந்த மாற்றம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜெயம் ரவியின் ‘பிரதர்’ படம் வெளியானது. இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
ஜெயம் ரவி இயக்குநராகவும் களம் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அவரிடம் மூன்று கதைகள் இருப்பதாகவும், முதலில் யோகி பாபுவுடன் இணைந்து தனது இயக்குனர் பயணத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இதில் யோகி பாபு நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும், விரைவில் படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருப்பதாகவும் ஜெயம் ரவி தெரிவித்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் ஹீரோவாக நடிக்கவுள்ள இரண்டாவது படமும், மூன்றாவது படத்தில் இரு கதாநாயகர்களையும் மையமாகக் கொண்ட கதையை உருவாக்கியுள்ளார்.
முதல் படத்திற்கு தயாரிப்பாளர் கிடைத்துள்ளதாகவும், அடுத்த படங்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைத்தவுடன் உடனடியாக படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகவும் ஜெயம் ரவி குறிப்பிட்டுள்ளார். அண்மையில் தனது வாழ்க்கையில் மிகப்பெரிய முடிவெடுத்து மனைவி ஆர்த்தியுடன் பிரிவு பெற்றுள்ளதாகவும் அவர் அறிவித்தார். தற்போதைய நிலவரப்படி, ‘பிரதர்’ படத்தை தொடர்ந்து அடுத்த படங்களும் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன. இதேபோல், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘பிரதர்’ படத்தில் இணைந்துள்ளார்.