மோகித் சூரி இயக்கத்தில், அஹான் பாண்டே, அனீத் பட்டா உள்ளிட்ட பலர் நடித்த ‘சாயாரா’ என்ற ஹிந்தித் திரைப்படம் கடந்த ஜூலை 18ஆம் தேதி வெளியானது. தற்போது இந்தப் படம் உலகளவில் ரூ. 500 கோடியை வசூல் செய்துள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவிலேயே மட்டும் இந்தப் படம் மொத்தமாக ரூ. 376 கோடி (நிகர வசூல் ₹308 கோடி) வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் இந்தப் படம் ரூ. 131 கோடி வரை வசூலித்து, மொத்தமாக ரூ. 507 கோடி வரை உயர்ந்துள்ளது. ஒரு காதல் திரைப்படம் இந்த அளவிற்கு வசூலித்திருப்பது இந்திய திரையுலக வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
2025ம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களில், ஹிந்தியில் வெளியான ‘சாவா’ திரைப்படம் சுமார் ₹800 கோடி வசூலுடன் முதலிடத்தில் உள்ளது. அதன்பின் ‘சாயாரா’ ₹507 கோடி வசூலுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய திரையுலகத்தில் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்த திரைப்படங்களின் பட்டியலில் தற்போது 26வது இடத்தில் இந்தப் படம் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் ₹50 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம், அதன் பட்ஜெட்டை விட பத்து மடங்கு அதிகமாக வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.