Tuesday, January 21, 2025

தளபதி விஜய்யின் புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த சத்யராஜ்… வைரலான போஸ்ட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகக் கருதப்படும் சிபி சத்யராஜ், ‘வட்டம்’, ‘மாயோன்’, ‘கபடதாரி’, ‘வால்ட்டர்’ போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இவற்றின் தொடர்ச்சியாக, அவர் தற்போது ஆக்ஷன் கலந்த கிரைம் திரில்லர் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். இளையராஜா கலியபெருமாள் எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு ‘டென் ஹவர்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் சிபி சத்யராஜின் இன்ஸ்டா ஸ்டோரி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. காஞ்சிபுரம் அருகே பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராம மக்கள் கடந்த 900 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டில், இயற்கை வளங்களை அழிக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றினார். அதன் பின்னர், பரந்தூர் கிராம மக்களை விஜய் சந்தித்து, அவர்களுடன் பேசினார். இதன் தொடர்பான புகைப்படத்தை நடிகர் சிபி சத்யராஜ் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அவரது தந்தை சத்யராஜ் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ள நிலையில், அவரது மகள் சமீபத்தில் தற்போதை ஆளுங்கட்சியில் இணைந்தார். இந்நிலையில், சிபி சத்யராஜ் த.வெ.க விஜய்க்கு ஆதரவாக பதிவிட்டது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.இதற்கு முன்னர் தவெக முதல் மாநாட்டின் போது விஜய்யின் புகைப்படம் பதிவிட்டு அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News