Home சினிமா செய்திகள் இயக்குனர் பாரதிராஜா ரியோ ராஜ் நடித்துள்ள ‘நிறம் மாறும் உலகில் ‘ படப்பிடிப்பு நிறைவு!

இயக்குனர் பாரதிராஜா ரியோ ராஜ் நடித்துள்ள ‘நிறம் மாறும் உலகில் ‘ படப்பிடிப்பு நிறைவு!

0
13 views

இயக்குனர் பாரதிராஜா, அறிமுக இயக்குநர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறம் மாறும் உலகில்’ என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில் நட்டி, ரியோ ராஜ், சாண்டி, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மல்லிகா அர்ஜுன் மற்றும் மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு தேவ் பிரகாஷ் இசையமைத்துள்ளார். வாழ்க்கையில் உறவுகளின் அவசியம் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படமாக இது அமைந்துள்ளது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளதாக படக்குழு ஒரு சிறப்பு வீடியோ வெளியிட்டுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.