தமிழ் திரையுலகில் இப்போது பல பெரிய படங்களே தோல்வியை சந்தித்து வரும் சூழலில், ஏற்கனவே வெற்றிபெற்ற பழைய படங்கள் மீண்டும் திரையில் வெளியிட்டு நல்ல வசூலை ஈட்டுகின்றன.

அந்த வரிசையில், 2006-ஆம் ஆண்டு தமிழ்வண்ணன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா மற்றும் நயன்தாரா நடித்த ‘கள்வனின் காதலி’ திரைப்படம், 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வர உள்ளது.
பெண்களை சுய விருப்பத்துக்கேற்ப அணுகும் ஒருவன், உண்மை காதலால் எவ்வாறு மாற்றமடைகிறான் என்பதை மையமாகக் கொண்டு உருவாகிய இப்படம், வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்த பாடல்களும் பரவலாக பிரபலமானது. இப்போது, இந்த திரைப்படம் ரீ-ரிலீசாகும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ரோசிகா எண்டர்பிரைசஸ் நிறுவனம், சுதாகர் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது.