இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி ஆர்.ஆர்.ஆர் படத்தை தொடர்ந்து பிரமாண்ட பட்ஜெட்டில் ஒரு பிரம்மாண்டமான படத்தை மகேஷ் பாபு நடிப்பில் இயக்கி வருகிறார். இப்படத்தில் மந்தாகினியாக பிரியங்கா சோப்ராவும், கும்பா என்ற வில்லனாக பிரித்விராஜ் நடிக்கிறார்.
இப்படத்தின் படத்தின் தலைப்பு வெளியீட்டு விழா இன்று மாலை ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இப்படத்திற்கு வாரணாசி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக வீடியோ வெளியிட்டு அறிவித்தது.
இந்த படத்தில் ருத்ராவாக நடிகர் மகேஷ் பாபு நடிக்கிறார். தற்போது அவரது கதாபாத்திர போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருவது மட்டுமின்றி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

