Touring Talkies
100% Cinema

Tuesday, June 3, 2025

Touring Talkies

பென்ஸ் திரைப்படத்தின் அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராகவா லாரன்ஸ் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் பென்ஸ் என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றுகிறார்.

இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த விக்ரம், கைதி, லியோ ஆகிய படங்களைப் போலவே, பென்ஸ் படமும் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் (LCU) கதையமைப்புடன் தொடர்புடையதாக உருவாகி வருகிறது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

மேலும், தனுஷ் நடித்த வாத்தி படத்தில் கதாநாயகியாக நடித்த சம்யுக்தா மேனன் பென்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸுடன் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் “பென்ஸ் லோடிங்” என்று குறிப்பிட்டு இப்படத்திற்கான ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்கள்.

- Advertisement -

Read more

Local News