Monday, December 16, 2024

சிவகார்த்திகேயனின் புறநானூறு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் பிரபல தெலுங்கு நடிகையான ஸ்ரீ லீலா! #SK25

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயனின் சினிமா மார்க்கெட் அதிகரித்துள்ளது. அவர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்கிறார். இதைத் தவிர, சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் படத்திலும் அவர் நடிக்கவிருக்கிறார். அதேசமயம், சூர்யா நடிக்கவிருந்த புறநானூறு என்ற படம் தற்போது சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகிறது. கடந்த சில மாதங்களாக இப்படத்திற்கான தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தன, நேற்று இதன் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார், ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, டான் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது.

இப்படத்தில் வில்லனாக ஜெயம் ரவி நடிக்கிறார் என முன்னதாக தகவல் வெளியானது. பின்னர் அவர் படத்தில் இல்லை, அதற்கு பதிலாக அதர்வா நடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால், நேற்று நடந்த படத்தின் பூஜை விழாவில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம் ரவியும் அதர்வாவும் கலந்து கொண்டனர்.

மேலும், படத்தின் அறவிப்பில் ஜெயம் ரவியும் அதர்வாவும் நடித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜெயம் ரவியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தெரியவந்துள்ளது. இதேசமயம், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள ஸ்ரீலீலா, இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். தெலுங்கு திரையுலகின் இளம் பிரபலமாக இருந்துவரும் ஸ்ரீலீலா, தமிழிலும் தன் திறமையை வெளிப்படுத்த தயாராகியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News