Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

‘பெருசு’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தஞ்சாவூர் அருகிலுள்ள ஒரத்தநாடு கிராமத்தில் வைபவின் அப்பா உயர்ந்த மரியாதையுடன் வாழ்ந்து வருகிறார். “பெருசு” என்று ஊர்மக்கள் அவரை அன்போடு அழைக்கிறார்கள். அவர் தனது மூத்த மகன் சுனில், அவரது மனைவி சாந்தினி, இளைய மகன் வைபவ், அவரது மனைவி நிஹாரிகா, மற்றும் அம்மா தனலட்சுமி ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகின்றார்.

ஒருநாள், பெருசு வீட்டு டிவி முன்பு அமர்ந்து இருந்தபோது திடீரென உயிரிழக்கிறார். ஆனால், அவரை பார்த்த குடும்பத்தினர் வெறுமனே அழவில்லை, அதற்கு பதிலாக பெரும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். அந்தக் காரணத்தை சரி செய்ய முடியாவிட்டால், பெருசு இறந்த செய்தியை ஊர்மக்களுக்கு அறிவிக்க முடியாது. இதனால், ஒட்டு மொத்த குடும்பமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. அந்த சொல்ல முடியாத விஷயம் என்ன? பெருசுவைப் பார்த்ததும் குடும்பத்தினர் ஏன் அதிர்ச்சி அடைந்தனர்? இறுதியில் அந்த பிரச்சனை சரியானதா, இல்லையா? என்பதே கதையின் மையப்புள்ளியாக அமைகிறது.

தமிழ் சினிமாவில் பல அடல்ட் காமெடி படங்கள் வெளிவந்துள்ளன. “பெருசு” திரைப்படத்தை இளங்கோ ராம் பிளாக் காமெடி பாணியில் இயக்கியுள்ளார். படம் ஏ-சர்டிபிகேட் பெற்றிருந்தாலும், அது முரட்டுத்தனமான காட்சிகளாக இல்லாமல், குடும்பத்துடன் ரசித்து சிரிக்கலாம் என்பதற்கான முழு கவனத்தையும் இயக்குனர் செலுத்தியுள்ளார். குறிப்பாக திரைக்கதை மற்றும் வசனம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.வைபவ் மிகச் சாதாரணமாக (casually) நடித்துள்ளார். ஆனால், பால சரவணன் உடன் இணைந்து அட்ராசிட்டியான காமெடி நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சுனில் பல காட்சிகளில் முகபாவம் மூலம் சூழ்நிலையை புரியவைக்கும் அளவுக்கு அற்புதமான நடிப்பு அளித்துள்ளார். அம்மா தனலட்சுமி தனது கதாபாத்திரத்துடன் முழுமையாக ஒத்துப் போயிருக்கிறார்.

அதோடு, முனிஸ்காந்த், கிங்ஸ்லி, கருணாகரன் ஆகியோர் காமெடியை மேலும் உயிர்ப்பிக்க உதவியுள்ளனர். சாந்தினி தமிழரசன் மற்றும் நிஹாரிகா ஆகியோரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர். சுவாமிநாதன், வழக்கமான அடல்ட் காமெடி நடிப்பில் கலக்கியுள்ளார். சத்ய திலகம் ஒளிப்பதிவில் காட்சிகள் வசீகரமாக பளிச்சிடுகின்றன. அருண் ராஜ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாக அமைந்துள்ளது.ஹாலிவுட் பாணியில் எடுக்கப்பட்ட பிளாக் காமெடி படமாக, தமிழ் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் ஒரு புதிய அனுபவமாக அமைகிறது. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சிறப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

Read more

Local News