ஒருவரே சினிமாவின் பல துறைகளை கையாண்டு ஒரு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். முதன்முறையாக லாவண்யா என்ற பெண் இயக்குனர் 32 துறைகளை கையாண்டு ‘பேய் கொட்டு’ என்ற படத்தை உருவாக்கி உள்ளார். திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, ஒளிப்பதிவு, எடிட்டங் உள்ளிட்ட துறைகளை கையாண்டிருப்பதுடன் அவரே நடிக்கவும் செய்துள்ளார்.இபடம் வருகிற 21ம் தேதி வெளிவருகிறது. இதுகுறித்து லாவண்யா கூறும்போது கணவன், குழந்தை என வாழ்கிற ஒரு சாதாரண பெண்தான் நான். ஆனால் எனக்குள் சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் இருக்கிறது. நன்றாக பாடுவேன், ஆடுவேன், நடிப்பேன், படம் இயக்குவேன், கேமரா கையாளத் தெரியும். எனது மனதில் ஒரு வைராக்கியம் உண்டானது. ஒரு பெண்ணால் சினிமாவில் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கவே இந்த படத்தை நான் உருவாக்கினேன். படம் சொல்லும் கருத்தும் அதுதான் என்றார்.
