தமிழ் சினிமாவில் கைதி, மாஸ்டர், குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் அர்ஜுன் தாஸ். தற்போது அவர் தெலுங்கு மொழியில் பவன் கல்யாணுடன் இணைந்து ‘ஓஜி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

அர்ஜூன் தாஸ் வெளியிட்ட சமீபத்திய பதிவில், ‘ஓஜி’ படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த இயக்குநர் சுஜித் மற்றும் தயாரிப்பாளருக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். ஏனெனில், பவன் கல்யாணுடன் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது தன்னை நீண்ட காலமாக நெஞ்சில் வைத்திருந்த கனவு என்றும், அந்தக் கனவை இந்த படத்தின் வாயிலாக நிறைவேற்றியிருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பவன் கல்யாண் ஒரு தெய்வீகமான மனிதர் என்றும், அவரின் எளிமையும், அன்பும் தன்னை ஆழமாக ஈர்த்தது என்றும் கூறியுள்ளார். பவன் கல்யாணுடன் சேர்ந்து ‘ஓஜி’ படத்தில் நடித்த அனுபவத்தை தன் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது என உணர்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவருடன் நடித்ததை முடித்ததும் மகிழ்ச்சி கொடுத்தாலும், இனி அவருடன் தினமும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இயலாது என்ற எண்ணம் ஏக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும், பவன் கல்யாணுடன் நடித்த இந்த பயணம் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று என உணர்ச்சி பூர்வமாக தெரிவித்துள்ளார் அர்ஜுன் தாஸ்.