‘பிரேமலு’ படத்தின் இயக்குநர் கிரிஷ் பொத்துவாளின் அடுத்த படத்திற்கு ‘‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
‘‘பிரேமலு’’ மற்றும் ‘‘கும்பலங்கி நைட்ஸ்’’ போன்ற மெகா ஹிட்டுகளை வழங்கிய பாவனா ஸ்டுடியோஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இந்தக் கதையை இயக்குநர் கிரிஷ் மற்றும் கிரண் ஜோசி இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.
இப்படத்தின் இசையமைப்பை விஷ்ணு விஜய் மேற்கொள்கிறார். அதேபோல் நிவின் பாலி, அகில் சத்யன் இயக்கும் திகில் நகைச்சுவை படமான ‘சர்வம் மாயா’ மற்றும் தமிழில் ராகவா லாரன்ஸ் நடிக்கும்‘பென்ஸ்’ படங்களில் நடித்து வருகிறார். மமிதா பைஜு ‘ட்யூட்’, ‘சூர்யா 46’, சங்கீத் பிரதாப்பன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.