கன்னட திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா தற்போது இயக்குனராக தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். இவர் தற்போது இயக்கி வருகிற படம் 45 எனப்படுகிறது. இந்தப் படத்தில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிவராஜ்குமார், உபேந்திரா மற்றும் ராஜ் பி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தற்போது, இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்பது தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 45 திரைப்படத்தின் டீசர் மார்ச் 30ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மாலை 6.45 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜுன் ஜன்யாவின் இயக்கத்தில், ரமேஷ் ரெட்டி தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படம், ஆக்ஷனும் கலந்த காமெடி படமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.