Touring Talkies
100% Cinema

Thursday, June 19, 2025

Touring Talkies

நடிகர் ஸ்ரீ எழுதி வெளியிட்ட புதிய ஆங்கில நாவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘கனா காணும் காலங்கள்’ என்ற தொடரின் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் ஸ்ரீ, இவர் இயற்பெயர் ஸ்ரீராம் நடராஜன், 2012 ஆம் ஆண்டு வெளியான ‘வழக்கு எண் 18/9’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர், ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘வில் அம்பு’, ‘மாநகரம்’, ‘இறுகப்பற்று’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு வெளியான ‘இறுகப்பற்று’ திரைப்படத்திற்குப் பிறகு, அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு, ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் அவர் மிகவும் மெலிந்து காணப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, அவரது நெருங்கிய நண்பரான இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவருக்குத் தேவையான சிகிச்சையையும் உதவியையும் செய்தார். தற்போது, அவர் தனது குடும்பத்துடன் இணைந்து சிகிச்சை பெற்று நிலைமையை மீட்டுவருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நடிகர் ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய பதிவில், “May I come in?” என்ற ஆங்கில நாவலை தானே எழுதியிருப்பதாக அறிவித்துள்ளார். இது தனது முதல் ஆங்கில நாவலாகும் என்றும், இந்த நாவலை உலகுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News