Touring Talkies
100% Cinema

Wednesday, September 10, 2025

Touring Talkies

இதை ஒரு போதும் செய்ய வேண்டாம்… மக்களுக்கு மனமுருகி வேண்டுகோள் வைத்த நிக்கி கல்ராணி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அப்சரா ரெட்டியின் அறக்கட்டளை சார்பில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளின் பராமரிப்புக்காக 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகை நிக்கி கல்ராணி கலந்துகொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது கூறியதாவது,

“நாம் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பதைப் போலவே, உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளைத் தத்தெடுத்து, அவற்றின் பராமரிப்பு செலவுகளுக்காக நம்மால் முடிந்த நிதியுதவியை வழங்கலாம். எனக்கு சிறுவயதில் இருந்தே விலங்குகள் மீது பேரானந்தம் உண்டு. நாய்கள், பூனைகள் மட்டுமின்றி, எல்லா விலங்குகளையும் கருணையுடன் அணுக வேண்டும்.

சிலர் மாடுகளை வளர்த்து, பின்னர் அவற்றை சாலைகளில் விடுவதைக் காணும்போது, அது மிகவும் வருத்தமாக உள்ளது. அதுவும் ஒரு உயிர் தான். நாங்கள் மாடுகளை கடவுளைப்போல் மதிக்கிறோம். எனவே, தயவுசெய்து அவற்றை சாலைகளில் விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.” என்று நிக்கி கல்ராணி தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News