Touring Talkies
100% Cinema

Thursday, August 14, 2025

Touring Talkies

மலைவாழ் மக்களின் வாழ்வியலை பேச வரும் ‘நறுவீ’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஹரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ. அழகு பாண்டியன் தயாரிக்கும் படம் ‘நறுவீ’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சுபாரக் இயக்குகிறார். இதில் டாக்டர் ஹரீஷ் நாயகனாக நடித்துள்ளார். 

அவருடன் வின்சு, வி.ஜே. பப்பு, பதினி குமார், ஜீவா ரவி, பிரவீணா, காதே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ். ராஜா ஆகியோரும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அஸ்வத் இசையமைத்துள்ளார். ஆனந்த் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாகிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் சுபாரக் கூறும்போது, “மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். போக்குவரத்து வசதியற்ற கிராமங்களில், பெரும் சிரமங்களை எதிர்கொண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்” என்றார்.

- Advertisement -

Read more

Local News