தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நானி, கடைசியாக சூர்யாவின் சனிக்கிழமை என்ற படத்தில் நடித்திருந்தார். பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்த இப்படம், ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து, நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, நானி தனது அடுத்த படமாக ஹிட் 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கும் இப்படத்தை, பிரசாந்தி திபிர்னேனி தயாரிக்கிறார். ஹிட் படத் தொடரின் மூன்றாவது படமாக உருவாகும் இப்படம் வரவிருக்கும் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த சூழலில், ஹிட் 3 படத்தின் டீசர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டீசர் பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.