கன்னட திரையுலகில் முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும் வெற்றிகரமாக பயணித்து வரும் உபேந்திரா, சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்தின் நண்பராக “காளீசன்” என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதனால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். அவரின் மனைவி பிரியங்கா திரிவேதி, தமிழில் அஜித்துடன் ராஜா படத்தில் நடித்தவர். இந்நிலையில், இருவரின் மொபைல் போன்களும் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளன.

அந்த ஹேக் செய்யப்பட்ட போன்களில் இருந்து அவர்களது நண்பர்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகக் கூறி மெசேஜ்கள் அனுப்பப்பட்டன. இதனால் சந்தேகமுற்ற நண்பர்கள் மூலமாக விஷயம் உபேந்திரா, பிரியங்கா இருவருக்கும் தெரிய வந்தது.
உடனடியாக இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, “எங்களது மொபைல் போன்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. பணம் கேட்டு வரும் மெசேஜ்கள் எங்களால் அனுப்பப்படவில்லை. தயவுசெய்து அவற்றை புறக்கணிக்கவும். எங்கள் போன்கள் மீண்டும் எங்களுக்கு கிடைத்ததும் நாங்களே அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம்” என்று கூறினர்.