இசையமைப்பாளர் இமான், எனது எக்ஸ் கணக்கு சிலரால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஹேக் செய்தவர்கள் எனது ஈமெயில் ஐடி, பாஸ்வேர்டு ஆகியவற்றை மாற்றி இருக்கிறார்கள். 24 மணி நேரத்திற்குள் ஒரு பதிவையும் போஸ்ட் செய்திருக்கிறார்கள். தற்போது எக்ஸ் வலைதள டீமுக்கு இதுகுறித்து தெரியப்படுத்தி உள்ளேன். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக இசைத்துறையில் இருந்து வருவதால் என்னை பின்தொடர்பவர்களுடன் தொடர்பில் இருப்பது எனக்கு இன்றியமையாதது. என்னுடைய எக்ஸ் கணக்கில் ஏதாவது தவறான பதிவுகள் வந்தால் அது என்னை பொறுத்தது அல்ல. அதனால் தயவு செய்து அவற்றை புறக்கணித்து விடுங்கள் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
