கேரள மாநில ராஜ்யசபா உறுப்பினராகவும், நடிகர் மம்முட்டியின் நெருக்கமான நண்பராகவும் இருக்கும் ஜான் பிரிட்டாஸ், மம்முட்டியின் உடல்நிலை குறித்து ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “மம்முட்டிக்கு இப்போது எதுவும் கவலைப்பட வேண்டிய அளவிலான உடல்நலக் குறைவு இல்லை. சிறிய அளவிலான சளி, காய்ச்சல் போன்ற மாற்றங்கள் மட்டுமே. அதற்கான சிகிச்சைகளை அவர் எடுத்துக் கொண்டு வருகிறார். வயதானபிறகு சிலருக்கு இப்படி ஏற்படுவது வழக்கமானதே. அவர் தற்போது நன்றாக இருக்கிறார். சில நிமிடங்களுக்கு முன்பு அவருடன் செல் போனில் பேசின பிறகுதான் இந்த தகவலை உங்களிடம் பகிர்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மம்முட்டியின் தரப்பிலிருந்தும் அதேபோன்ற ஒரு விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அவர் எந்தவிதமான பெரிய உடல்நலக்குறைவாலும் பாதிக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. ரமலான் நோன்பு காரணமாக ஏற்பட்ட ஹரிவரிவிலிருந்து காரணமான சோர்விற்கு சிகிச்சை பெற்றுவந்ததால், அவர் தற்போது நலமாக இருந்து ஓய்வெடுத்து வருகிறார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.