இந்த வருடம் மலையாள திரையுலகில் “பீல்குட்” திரைப்படங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. மாறாக, “ரேக சித்திரம்”, “ஆபிசர் ஆன் டூட்டி” போன்ற துப்பறியும் கதைகள் மட்டுமே தொடர்ந்து வெற்றி காண்கின்றன.இந்நிலையில், மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “லூசிபர் 2 – எம்புரான்” திரைப்படம் மார்ச் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் ஒரு அதிரடி கமர்சியல் ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என்பது கூறிக்கொள்ள வேண்டியதே இல்லை.

இதையடுத்து, ஏப்ரல் 10ஆம் தேதி சித்திரை விசு கொண்டாட்டமாக மம்முட்டி நடித்த “பஷூக்கா” எனும் திரைப்படம் வெளியாவிருக்கிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் டினோ டென்னிஸ் இயக்கியுள்ளார். டினோ, மறைந்த மலையாள திரை உலகத்தின் பிரபல எழுத்தாளர் மற்றும் இயக்குனரான கலூர் டென்னிஸின் மகன் ஆவார்.
“பஷூக்கா” முழுமையாக ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இதில் கவுதம் வாசுதேவ மேனன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் மூலம், மலையாள சினிமா வரும் நாட்களில் ஆக்ஷன் முறைக்கு மாறப்போகிறது என்பது உறுதியாகிவிட்டது.