Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

என் குழந்தைப் பருவத்தின் இனிய நினைவுகளை மீட்டெடுத்தது மெய்யழகன்… வாழ்த்து பதிவிட்ட நடிகர் நாகார்ஜூனா! #MEIYAZHAGAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மெய்யழகன் என்ற உறவுகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் திரைப்படத்தை இயக்குநர் பிரேம்குமார் இயக்கி உள்ளார். இதில் கார்த்தி முதன் முறையாக அரவிந்த் சாமியுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும், ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்ரகாஷ் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜோதிகா, சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனமே இப்படத்தை தயாரித்துள்ளது. உறவுகளின் முக்கியத்துவத்தை அழுத்தமாகக் கூறும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தெலுங்கில் ‘சத்யம்சுந்தரம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மெய்யழகன் படத்தை பாராட்டி நடிகர் நாகார்ஜூனா தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், நேற்று என் அன்புச் சகோதரர் கார்த்தி நடித்த திரைப்படத்தைப் பார்த்தேன். ஆரம்பம் முதல் இறுதி வரை என் முகத்தில் இனிய புன்னகை இருந்தது. அதே மகிழ்ச்சியான உணர்வுடன் உறங்கச் சென்றேன். இந்த படம் என் குழந்தைப் பருவத்தின் இனிய நினைவுகளை மீட்டெடுத்ததோடு, நாங்கள் இருவரும் இணைந்து நடித்த ‘தோழா’ திரைப்படத்தின் அனுபவங்களையும் நினைவுபடுத்தியது” என்று நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News