பரமசிவன் பாத்திமா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் சேஷ்விதா கனிமொழி. விஜய் ஆண்டனி நடித்த மார்கன் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தார். தற்போது ‘குற்றம் புதிது’ என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியுள்ளார். ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நோகா ஆர்ம்ஸ்ட்ராங் என்ற புதுமுகம் இயக்குகிறார். தருண் விஜய் என்ற புதுமுகம் இதில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சேஷ்விதா நடிக்கிறார்.இவர்களுடன் மதுசூதனராவ், நிழல்கள் ரவி, ராமசந்திரன் துரைராஜ், பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜ்குமார் நடிக்கிறார்கள். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், கரன் கிருபா இசை அமைத்துள்ளார்.
