மம்முட்டி நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் படம் ‘கலம்காவல்’. மம்முட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனம் ‘மம்முட்டி கம்பெனி’ இதை தயாரித்து வருகிறது. ஆச்சரியமாக, இந்த படத்தில் மம்முட்டி வில்லத்தனமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அதற்கு மாறாக, பொதுவாக வில்லன் வேடங்களில் நடித்து வந்த விநாயகன், இந்த படத்தில் ஒரு நேர்மறையான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் என கூறப்படுகிறது. இதனால், இந்த படத்தைச் சுற்றிய எதிர்பார்ப்பு ஆரம்பத்திலேயே ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
மேலும், ஆரம்பத்திலிருந்தே வெளியாகி வரும் போஸ்டர்களில் மம்முட்டியின் புதிய கெட்டப் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வரிசையில், தற்போது புதிய போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஜிதின் கே. ஜோஸ் இயக்கி வருகிறார். இவர் முன்னதாக துல்கர் சல்மான் நடித்த ‘குறூப்’ படத்திற்குக் கதை எழுதியவர். விரைவில் இந்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.