மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகரான மம்மூட்டி, தனது திரைப்பயணத்தில் தொடர்ந்து சிறப்பாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த ‘டொமினிக் & தி லேடி பர்ஸ்’ திரைப்படம் வெளியானது, இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனுடன், அவர் நடித்த ‘பஸூகா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மம்மூட்டிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற வதந்திகள் இணையத்தில் பரவி வந்தன. இதற்காக அவர் சினிமாவில் இருந்து தற்காலிக ஓய்வு எடுத்துள்ளார் என்பதும் பரவலாக பேசப்பட்டது.
இந்த வதந்திகளை தகவல்களை மறுக்கும் விதமாக, மம்மூட்டி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியிடப்பட்டது. இது முற்றிலும் தவறான தகவல். மம்மூட்டி நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். தற்போது ரமலான் மாதம் என்பதால், அவர் நோன்பு இருந்து வருகிறார். அதற்காகவே, படப்பிடிப்பில் இருந்து சில நாட்கள் ஓய்வு எடுத்துள்ளார். இந்த ஓய்வு முடிந்தவுடன், அவர் மகேஷ் நாராயணன் இயக்கும் புதிய படப்பிடிப்புக்கு புறப்படுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.