Touring Talkies
100% Cinema

Tuesday, August 19, 2025

Touring Talkies

யஷ்-ன் டாக்ஸிக் படத்தில் இணைந்த மதராஸி பட நடிகை ருக்மிணி வசந்த்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், கே.ஜி.எப் புகழ் யஷ் தனது 19வது படமாக ‘டாக்சிக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்து வருகிறது. யஷ் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன், கதாநாயகியாக கியாரா அத்வானி மற்றும் ஹூமா குரேஷி இணைந்து நடித்துவருகின்றனர். மேலும், முக்கியமான பாத்திரத்தில் நடிகை நயன்தாராவும் இணைந்துள்ளார்.

இப்படம் கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது. 2026 மார்ச் 19ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் பல கட்ட படப்பிடிப்புகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், தற்போது மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் ருக்மணி வசந்த் இணைந்துள்ளார்.

அவரது சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ருக்மணி வசந்த், ‘காந்தாரா சாப்டர் 1’, ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படம், மற்றும் இப்போது ‘டாக்சிக்’ என தொடர்ந்து பான் இந்திய படங்களில் வாய்ப்புகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News