எம்புரான் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த பிரபல நடிகர் அபிமன்யு சிங், ஒரு சினிமா சினிமாவாகதான் பார்க்கப்பட வேண்டும் அதேபோல் தான் எம்புரான் படத்தை பார்க்க வேண்டும் என நான் நினைக்கிறேன். நான் பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஒரு காட்சி எப்படியான விஷயங்களைக் கேட்கிறதோ, அதைக் கொடுக்க வேண்டியதுதான் ஒரு நடிகரின் கடமை. படத்தின் மீது கவனம் செலுத்தும்போது அது ஏற்படுத்தும் விளைவுகளை எதிர்பார்த்திருக்கமாட்டோம். எவருடைய சென்டிமெண்ட்டையும் காயப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் நாங்கள் செயல்படவில்லை என்றுள்ளார்.
