இசையமைப்பாளர் கங்கை அமரன், தற்போது நடிகராக அறிமுகமாக இருக்கிறார். கங்கை அமரனை வெறும் இயக்குனர் என்ற ஒரே வார்த்தையில் சொல்ல முடியாது; அவர் இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், டப்பிங் கலைஞர் என பல திறமைகள் கொண்டவர். இதற்கு முன்பு சில படங்களில் சின்னச் சின்ன காட்சிகளில் நடித்த அனுபவம் இருந்தாலும், இப்போது முதல் முறையாக முழு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகராக தோன்ற உள்ளார்.

இந்த படத்திற்கு லெனின் பாண்டியன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமாரின் மகனான தர்ஷன் கணேசன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
நடிகராக அறிமுகமாகும் தந்தை கங்கை அமரனுக்கு, அவரது மூத்த மகன் வெங்கட் பிரபு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, “அப்பா நடிகராக அறிமுகமாகுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. படக்குழுவிற்கு என் வாழ்த்துகள்,” என பதிவிட்டுள்ளார்.