பாலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்பை ஆக்சன் திரில்லர் படங்களில் ஒன்றான ”வார் 2”, ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழ் , இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உலகளவில் வெளியாக உள்ளது. அயன் முகர்ஜி இயக்கி உள்ள இந்தப் படத்தில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.மத்திய தணிக்கை வாரியம் ஆபாசமான காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என வழியுறுத்தியிருந்த நிலையில், ஆவான் ஜாவன் பாடலில் இருந்து கியாரா நடித்துள்ள 9 வினாடி கவர்ச்சிகரமான பிகினி காட்சிகள் நீக்கபட்டுள்ளன. அதனைதொடர்ந்து தணிக்கை குழு இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. பிகினி காட்சிகளை நீக்கியதால் கியாரா ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
