மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் ஜோஜூ ஜார்ஜ். கடந்த சில ஆண்டுகளில் தனது திறமையான நடிப்பால் ஜோஜூ ஜார்ஜ் ஜோசப் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்தார். தமிழிலும் அவர் ஜகமே தந்திரம், சமீபத்தில் வெளியான ரெட்ரோ, தக்லைப் போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தற்போது பிரபல இயக்குனர் ஷாஜி கைலாஷின் இயக்கத்தில் வரவு என்கிற புதிய படத்தில் கதாநாயகனாக ஜோஜூ ஜார்ஜ் நடித்துவருகிறார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நயன்தாரா நடித்த புதிய நியமம் போன்ற படங்களை இயக்கிய கதாசிரியர் ஏ.கே. சாஜன் இந்த படத்திற்கான கதையை எழுதியுள்ளார்.
ஒரு பழிவாங்கும் கதைக்களத்தில் இந்த படம் உருவாகிறது. “பழிவாங்குதல் என்பது ஒரு மோசமான வியாபாரம் அல்ல” என்ற வாசகம் இப்படத்தின் டேக்லைனாக வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் ஷாஜி கைலாஷ் மலையாளத்தில் ஏராளமான ஹிட் படங்களை வழங்கியவர். தமிழிலும் வாஞ்சிநாதன், ஜனா, எல்லாம் அவன் செயல் போன்ற சில திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.