நடிகர் பிரபாஸ், பாகுபலி படத்தின் பெரும் வெற்றிக்கு பின்னர், இந்திய அளவில் மிக பெரிய நட்சத்திரமாக மாறியுள்ளார். உலக அளவிலும் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களை பெற்ற நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். தொடர்ந்து அவர் நடித்து வரும் திரைப்படங்கள் வெற்றி அல்லது தோல்வியுடன் இருந்தாலும், 500 கோடியிலிருந்து ஆயிரம் கோடி வரை வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனால், பாகுபலி படம் வெளிவந்ததற்கு பின் பல ஆண்டுகள் கடந்து சென்றாலும், நடிகர் பிரபாஸ் தனது திருமணம் குறித்து இதுவரை எந்த விதமான கருத்தையும் வெளிப்படுத்தவில்லை. அவர் மற்றும் சக நடிகை அனுஷ்கா இருவருக்கும் காதல் இருந்தது எனவும், விரைவில் இருவரும் திருமணம் செய்ய உள்ளனர் எனவும் பல முறை பேச்சுகள் வெளியானாலும், இருவரும் இதுவரை இவ்விடயத்தில் சற்று கூட வாய் திறக்காமல் இருக்கின்றனர்.
இந்த நிலமைக்குள், பிரபாஸின் அம்மா சிவகுமாரி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி சமூக வலைதளங்களில் பரவலாக வைரல் ஆகி வருகிறது. அந்த பேட்டியில், அவர் கூறியதாவது: “பிரபாஸிற்கு ரவி என்ற நெருங்கிய நண்பன் இருக்கிறார். ஆனால் அவரின் திருமண வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கவில்லை. அது போராட்டங்களால் நிரம்பி, இறுதியில் கசப்பான முடிவுடன் முடிவடைந்தது. இந்த அனுபவம் பிரபாஸின் மனதில் ஆழமாக பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் திருமண வாழ்க்கை பற்றிய மீதமான நம்பிக்கை அவருக்கு குறைந்து விட்டது. திருமண வாழ்க்கை என்றால் எப்போதும் இப்படி தானே இருக்கும் என்பதற்கான ஒரு எண்ணம் அவரின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. இதனால் தான் திருமணத்தில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. எனினும், ஒரு நாள் அவர் மனம் மாற வாய்ப்பு உள்ளது” என்று கூறியுள்ளார்.