தனுஷ் தற்போது ஹிந்தி மொழியில் ‘தேரே இஸ்க் மேயின்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன்பின், அவர் ‘இட்லி கடை’ மற்றும் ‘குபேரா’ திரைப்படங்களின் மீதமுள்ள படப்பிடிப்புகளில் பங்கேற்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தமிழில் ‘போர் தொழில்’ படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில், இந்தப் படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான முன்னேற்பாடுகள் இப்போது நடைபெற்று வருகின்றன என்றும் கூறப்படுகிறது. அதேசமயம் லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதிபடுத்தியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கும் என்று கூறியுள்ளார். அதேபோல் அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த படத்தின் படப்பிடிப்பு முதலில் ஆரம்பிக்கும் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.