நடிகர் நாகார்ஜுனா, நடிகை அமலா தம்பதியினரின் மகன் அகில் அக்கினேனி, ஜைனப் ரவ்ட்ஜி ஆகியோரது திருமணம் நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி, அவரது மகன் ராம் சரண், நடிகர்கள் மகேஷ் பாபு, நானி, கன்னட நடிகர் சுதீப், தமிழ் நடிகர் சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நிகழ்ச்சியில் நடிகர் மகேஷ்பாபு அணிந்து வந்த டி-ஷர்ட் பற்றி சமூக வலைத்தளங்களில் பேசு பொருளானது. பார்ப்பதற்கு எளிமையான டிசைன் போல தோற்றமளித்தாலும் அந்த டி-ஷர்ட்டின் விலை ரூ 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ளது என ரசிகரகள் கண்டுபிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்கள்.
