எச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் கடைசி படம் ஜனநாயகன். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரேன், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். முதலில் இந்த படத்தை அக்டோபர் மாதத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், தற்போதைய தகவல்படி, ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு, அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158017.jpg)
மேலும், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படத்தையும் அடுத்த ஆண்டு பொங்கல் நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158018.jpg)
ஆனால், தற்போது விஜயின் ஜனநாயகன் திரைப்படமும் அதே நாளில் வெளியாகும் நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த நேரடி மோதலைத் தவிர்க்கும் வகையில், பராசக்தி திரைப்படத்தை பொங்கலுக்கு முன்பாகவே வெளியிட இயக்குனர் சுதா யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.