Touring Talkies
100% Cinema

Tuesday, September 9, 2025

Touring Talkies

நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தின் படப்பிடிப்பில் தாமதமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு திரையுலகில் முன்னணியில் உள்ள இளம் நடிகரான நானி நடித்த ‘ஹிட் 3’ சமீபத்தில் வெளியாகி, ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு முந்தையதாக, நானி நடித்த ‘தி பாரடைஸ்’ என்ற திரைப்படம் குறித்து அறிவிக்கப்பட்டது. விவேக் ஆதிரேயா இயக்கும் இந்த படத்தில் நானி ஒரு புரட்சிகரமான தலைவராக நடிக்கிறார்.

 வரலாற்று பின்னணியில் உருவாகும் இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. ஹைதராபாத் அருகே பெரும் அளவில் பல அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த இடங்களே பெரும்பாலான காட்சிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளன.

இவை அனைத்தும் முறையாகத் தயாராவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போய்வருகிறது. படம் குறித்த அறிவிப்பு வெளியானபோதே, இது 2026 மார்ச் 27ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்திருந்தனர். இது, ராம்சரணின் ‘பெத்தி’ திரைப்படமும் வெளியாகும் அதே தேதியாகும். இருப்பினும் தற்போதைய தாமத நிலை தொடர்ந்தால், ‘தி பாரடைஸ்’ படம் அந்த தேதியில் வெளியாகும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது எனத் தெலுங்கு திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News