தெலுங்குத் திரைப்பட துறையில் முன்னணியில் இருக்கும் நடிகர் பிரபாஸ், தற்போது இயக்குநர் மாருதியுடன் இணைந்து ஹாரர் காமெடி வகை படமான ‘தி ராஜா சாப்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் ஜிஎஸ்கே மீடியா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இதில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் மற்ற தகவல்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து, இயக்குநர் மாருதி இது தொடர்பாக கூறியதாவது, “‘தி ராஜா சாப்’ படத்தின் ஒரு சில பகுதிகள் மற்றும் பாடல் காட்சிகள் மட்டுமே மீதமுள்ளது. அந்த பாடல்கள் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். இன்னும் சில தொழில்நுட்ப வேலைகளும் இருப்பதால், வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் சரியான நேரத்தில் அறிவிப்பார்கள்” என தெரிவித்தார்.