Touring Talkies
100% Cinema

Monday, March 10, 2025

Touring Talkies

அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக இலங்கை செல்ல தயாராகிறதா பராசக்தி படக்குழு? #PARASAKTHI

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பராசக்தி’ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் தொடங்க உள்ளது. ‘அமரன்’ வெற்றியை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இயக்குனர் சுதா கொங்காரா இப்படத்தை இயக்கி வருகிறார்.

இதற்கு முன், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடியில் நடைபெற்றது. பின்னர், மதுரையிலும் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தது என இயக்குனர் சுதா கொங்காரா தெரிவித்திருந்தார்.

தற்போது, ‘பராசக்தி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் தொடங்க உள்ளது. இதற்காக, அடுத்த வாரம் படக்குழு இலங்கை செல்லும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.அங்கு, யாழ்ப்பாண நூலகம் எரிந்த வரலாற்று சம்பவத்தை நினைவூட்டும் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News