லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘கூலி’. இந்தப் படத்தில் நாகார்ஜூனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சவுபின் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், சிறப்பு தோற்றங்களில் அமீர் கான் மற்றும் பூஜா ஹெக்டே நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத்.

இதற்கு முன்னதாகவே, இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம், மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்பட்டு, தற்போது முழுமையாக நிறைவுபெற்றது. தற்போது, இப்படத்தின் முதல் பாடலை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘சிக்கிட்டு வைப்’ என்ற பாடல், கிளிம்ஸ் வடிவில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த பாடல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் பாடலின் புரோமோ வீடியோவில் அனிருத்துடன் இணைந்து டி. ராஜேந்தர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான படப்பிடிப்பும் தற்போது முடிந்துவிட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.