அமரன் படத்திற்கு பிறகு, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அதன் பின்னர் அவர் சுதா கெங்கரா மற்றும் சிபி சக்ரவர்த்தி இயக்கும் படங்களில் தொடர்ச்சியாக நடிக்க இருக்கிறார்.
இந்த சூழலில், ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் விரைவில் ஹிந்தி சினிமாவில் அறிமுகமாகப் போவதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாலிவுட் நடிகர் அமீர்கான் தன்னைக் தொடர்புகொண்டு, தனது தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படத்தில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் கூறியுள்ளார். ஆனால் அப்போது அந்த படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்ததும் அமீர்கான் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவிலிருந்து தனுஷ் அவ்வப்போது ஹிந்தி படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது சிவகார்த்திகேயனும் பாலிவுட் சினிமாவில் தனது நடிப்பை தொடங்க உள்ளார்.