Touring Talkies
100% Cinema

Monday, June 9, 2025

Touring Talkies

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறாரா? வெளியான புது தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தக் லைஃப்’. இதில் சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியான பின்னர் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அதேவேளை, இந்த படத்தில் சிம்பு நடித்துள்ள கதாப்பாத்திரம் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

சிம்பு அடுத்ததாக STR 49, STR 50 மற்றும் STR 51 என்ற படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதையடுத்து, வெற்றி மாறன் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வடசென்னை பகுதியில் நடைபெறும் கேங்ஸ்டர் கதையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக இருக்கிறது. இதன் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தைத் தொடர்ந்து வெற்றி மாறன் ‘வாடிவாசல்’ மற்றும் ‘வடசென்னை 2’ ஆகிய படங்களை இயக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News