தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் நயன்தாரா. திருமணத்திற்கும் குழந்தைகளின் பிறப்பிற்கும் பிறகு, முழுமையான முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களைக் கொண்ட படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமாவை தாண்டி, தற்போது ஹிந்தித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இப்போது அவர் டெஸ்ட், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டுடண்ட், டாக்ஸிக், ராக்காயி போன்ற படங்களை உட்பட அரை டஜன் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு மாருதி இயக்கத்தில், பிரபாஸ் நடிக்கும் தி ராஜா சாப் என்ற படத்தில், நயன்தாரா ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்கான பாடல் காட்சியின் படப்பிடிப்பு விரைவில் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது எனக் கூறப்படுகிறது. இதற்கு முன்பு, நயன்தாரா சிவாஜி மற்றும் எதிர்நீச்சல் ஆகிய திரைப்படங்களில் மட்டுமே சிறப்பு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.